Tuesday, March 5, 2013

vishnu sahasranamam by bishmer


                        போர்க்களத்தில்  பக்தி ரசம் 
பீஷ்மன்  தனது  மரணத்தை தான்  விரும்பிய நேரத்தில்  பெற்றுக்கொள்ளும்  ரத்தை வாங்கியவன். சத்தியம், தர்மம், வீரம்  எல்லாம்  ஒன்றாக  உரு பெற்றவன்.உன்னை எப்படி வெல்வது என்று  கேட்ட தர்மனுக்கு  தன்னை  ஒரு  பெண்  எதிர்த்தால்  ஆயுதம் தொட மாட்டேன் என்று  தானே  தனது  வீழ்ச்சிக்கு  வழிசொன்ன  நேர்மையாளன். சிகண்டியை  முன்னிறுத்தி  அர்ஜுனன்  போர் புரிந்தபோது அதனால் வீழ்ந்து  தன் உத்தராயண புண்ய கால மரணத்துக்கு   அர்ஜுனன்  தொடுத்து கொடுத்த  அம்பு  படுக்கையில் காத்திருந்தவன் பீஷ்மன்கிருஷ்ணனிடம் அபார  பிரேமையும் பக்தியும்  கொண்டவன். கடைசி காலத்தில் கிருஷ்ணனோடு  நிறைய  நேரம்  செலவிட ஆசை.  ஒரு  நாள் கிருஷ்ணன்  பீஷ்மனை சந்தித்து "பீஷ்ம  பிதாமகரே  உத்தராயணம் வர  இன்னும் 65நாள்  தான்  இருக்கு . அதற்குள் யுதிஷ்டிரனை  கூப்பிட்டு நிறைய உபதேசம் செய்யுங்கள். அவன்  மூலம் உங்கள்  தர்ம  ஞான  சாஸ்திரங்கள் பரவட்டும். அவன்  ஒருவனே தகுதியானவன்" 
"கிருஷ்ணா,  நான் உன்னை  அறிவேன்  நீ தான்   எனக்கு அருள் புரியவேண்டும் உன்  சொல்படியே செய்கிறேன்"  என்றான் பீஷ்மன்"  பீஷ்மன் கிருஷ்ணனையே உற்று பார்த்து கொண்டிருந்ததால் "என்ன  பீஷ்மரே என்னையே பார்த்துகொண்டிருக்கிரீர்கள்?"    
"கிருஷ்ணா  நீ  என்னை  கொல்ல வந்தது நினைவிருக்கிறதா?
சிரித்துக்கொண்டே  தலை யசைத்தான்  கிருஷ்ணன். அந்த காட்சி அவன் மனதில்  திரையோடியது.
அர்ஜுனனால் பீஷ்மரை  தடுக்க முடியவில்லை.  பீஷ்மர்  சுனாமி போல பாண்டவ   சைனியத்தை அழித்து கொண்டிருந்தார். வெகுநேரம்  இதை  கவனித்து கொண்டிருந்த கண்ணன் அர்ஜுனனை  எவ்வளவோ  ஊக்குவித்தும்  அவன் மனதில்  தாத்தாவை எப்படி கொல்வது என்ற  மதிப்பு தான் இருந்ததே தவிர  எதிரி  என்ற  எண்ணம்  இல்லை  ஆகவே தான்  அவனது யுத்தம் பயன் தராது என புரிந்து  கொண்ட கிருஷ்ணன்  தேரை நிறுத்தினான்.  கையிலிருந்த சாட்டையோடு  பீஷ்மரை  நோக்கி ஓடினான். கண்கள் சிவக்க கோபாவேசமாய்  கண்ணன்  தன்னை  நோக்கி வருவதை  கண்ட  பீஷ்மன்  ஆயுதங்களை கீழே போட்டு விட்டு  கைகூப்பி  கண்ணனை  வேண்டினான். "உன்னை எப்படியாவது  யுத்தத்தில்  பங்கேற்க வைக்கிறேன் என்ற என்  வாக்கு  நிறைவேறட்டும். உன் கையால் மரணம் கிட்ட  நான்  பாக்கியம் செய்தவன்" என்றான் பீஷ்மன்.
இதற்குள்  அர்ஜுனன் பின்னாலேயே  ஓடிவந்து  க்ரிஷ்ணனை  தடுத்தான்.  “கண்ணா  சற்று பொறு  நானே  யுத்தம் செய்கிறேன்.  பீஷ்மரை ஜெயிக்கிறேன்  என்றான்.  கோபமடங்காமல் கிருஷ்ணன்  அர்ஜுனனை  தூர தள்ளினான்.  அர்ஜுனன்  கண்ணன் காலில் விழுந்து “ பொறு கண்ணா  பொறு  என்று வேண்டி  “கிருஷ்ணா   நீ   போரில் ஆயுத மெடுப்பதில்லை என்று செய்த சத்தியத்தை  நினைவு  கூர் என்று  கெஞ்சி  அவனை மீண்டும்  தேரை செலுத்தவைத்தான். 
 பீஷ்ம பிதாமகரேஇந்த  65   நாட்களிலும் உங்களுக்கு  ஒரு  வலியோ, பசியோ உடல்  உபாதையோ நேராது.  உங்கள்  மனம்  தெளிவாக இருக்கும். உடலிலும்  மனதிலும் நிரம்ப சக்தியும் ஆர்வமும்  இருக்கும்.  உமக்கிட்ட வேலையை நன்றாக செய்யலாம். உம்மை விட  சிறந்த சுத்த வீரரோ பக்தரோஸ்ரேஷ்டரோ இதுவரை இல்லை. எனவே நீர்  தான்  பொருத்தமானவர் இதை போதிக்க" என்றான் கிருஷ்ணன். 
கிருஷ்ணன் அருளால் பீஷ்மன்   நாவிலிருந்து  ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் பிறந்தது. யுதிஷ்டிரன்  வாயிலாக  அது வெளிப்பட்டது. சஞ்சயன் வாய்மொழியாக மகா பாரதத்தில் இடம் பெற்றது. புத்தகமாக  நம் கையில் உள்ளது. MSSகுரலில்  நம் வீட்டில் ஒலிக்கிறது 

No comments:

Post a Comment