Friday, April 26, 2013

ghost train

Ghost Train 

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

joinGroup

Thursday, April 25, 2013

krishna

                                  கிருஷ்ணனின்  பிரார்த்தனை 

நாரதரும்  கிருஷ்ணனும்  நல்ல  நண்பர்கள்  அல்லவாஅடிக்கடி  நாரதர் துவாரகைக்கு  வருவார்  கிருஷ்ணனைக்   காண.  கிருஷ்ணனுக்கும் நாரதரோடு  அளவளாவ  ரொம்ப பிடிக்கும். அவனுடைய பக்தர்களில் அவர்  சிறந்தவர்  அல்லவா.?  ஒரு நாள்  நாரதர் கிருஷ்ணன் அரண்மனைக்கு  வந்தார். வாசலில் வாயிலில் புதிதாக ஒரு  காவலன் இருந்தான். அவனுக்கு  நாரதரை தெரியாது.  உள்ளே போக முயற்சித்த  நாரதரை  தடுத்தான்  
முனிவரே  யார்  நீங்கள்?”
என்னை தெரியாதா உனக்கு?
தெரியாது  அய்யா 
நான் நாரதன் 
சரி. உள்ளே போக முடியாது.
நீ  புதியவன்  போல  இருக்கிறது. என்னை  யாரும் தடுப்பதில்லை.  நான்  கிருஷ்ணனின் அந்தப்புரம் வரை போக அனுமதிக்கப்பட்டவன் 
சுவாமி, எனக்கு  அதெல்லாம் தெரியாது. எஜமான் யாரையும்  உள்ளே  விடாதே  என்று கட்டளையிட்டு இருக்கிறார்.  நான்  என் வேலையை செய்ய விடுங்கள்.
நாரதன்  வந்திருக்கிறேன்  என்று  போய்  சொல் அவரே வந்து  என்னை  அழைத்து போவார்.
சுவாமி நாரதர்  என்ற  பெயர்  எனக்கு  நன்றாக தெரியும் எனக்கு  உங்கள் மீது  மரியாதை
 உண்டு  நீங்கள்  சொல்வதை  நான்  நம்புகிறேன்  ஆனால் இன்றுஎனக்கு  என்ன  கட்டளை  என்றால் "எஜமான் பிரார்த்தனை செய்கிறார் அந்த  நேரத்தில் யாராயிருந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லிவிட்டு
போயிருக்கிறார். பிரார்த்தனை  முடிந்து  அவரே  வந்து சொல்லுவார் பிறகு  நீங்கள்  உள்ளே
 போகலாம்   நாரதருக்கு ஆச்சர்யம .” என்ன, கிருஷ்ணனே பிரார்த்தனை செய்கிறானா??
 யாரிடம்?  மூவுலகுமே  அவனை  பிரார்த்திக்கும்போது அவன்  யாரை  பிரார்த்திக்கிறான்?. புரியவில்லையே. ஏதோ புதிராக  இருக்கிறதே!!~” நாரதருக்கு   அந்த  காவலாளி மேல்  கோபம்  வந்தது.
தம்பி,  நீ  சொல்வது பிசகு. உன்  எஜமானனை  தாழ்த்தி சொல்லி விட்டாய். அவருக்கு   தெரிந்தால் இது  உனக்கு நல்லதில்லை. அவர்  கடவுள். அவரை  எல்லாரும்  வணங்கி பிரார்த்திக்கும்போது
அவரே  யாரிடமோ  பிரார்த்தனை  செய்கிறார்  என்பது ரொம்ப  தப்பு.
முனிவரே,  என்னை  மன்னித்துவிடுங்கள். நான்  கூட்டியோ குறைத்தோ சொல்லவில்லை.
எஜமான்  என்னிடம் என்ன  சொன்னாரோ  அதைத்தான் சொன்னேன்.  தவறு செய்யவில்லை.
நாரதர் பேசாமல்  நின்றார்.  நேரம்  ஓடியது.  ஏறக்குறைய அரை மணி நேரம் சிலையாக நின்ற  நாரதரிடம்
கிருஷ்ணனே வந்தான்.  
வாருங்கள்  நாரதரே,  வெகுநேரமாக காத்திருக்கிறீர்களோ?” என்றான் கிருஷ்ணன்.  
பரவாயில்லை. காத்திருக்க வேண்டியவன் காத்திருந்தேன். என்று  பட்டென்று நாரதர்  சொன்னார்.
முனிஸ்ரேஷ்டரே!,   இன்று  உங்கள்  முகம் வழக்கம்போல்  பிரசன்னமாக  இல்லையே.ஏதோ  உள்ளே
 சில  எண்ணங்கள்  உங்களை  வாட்டுவது போல் அல்லவோ  எனக்கு  தோன்றுகிறத!” 
வழக்கம் போல் நான்  இல்லை  என்பது  வாஸ்தவமே. இன்று  தான்  முதல்  முதலாக உங்கள் காவலாளி என்னை இதுவரை தடுத்து நிறுத்தி  உள்ளே  அனுமதிக்கவில்லை.”
"ஆமாம்"  
கிருஷ்ணா,  நீ  பிரார்த்தனையா  செய்து கொண்டிருந்தாய். இந்த நேரத்தில் யாரையும் உள்ளே
விடாதே என்றாயாம். முன்னுக்கு  பின்  முரணாக இருக்கிறதே?”. 
ஆமாம் அவன்  சொன்னது  சரியே.!” 
என்னால் என் காதுகளையே  நம்ப முடியவில்லையே நீயா சொல்கிறாய் பிரார்த்தனை  பண்ணிக் கொண்டிருந்தேன்”  என்று??” 
ஆமாம்!  நாரதா.” 
யாரை  பிரார்த்தனை செய்ய வேண்டும்?  அதுவும்  நீ!!” 
என்ன  நாரதா  உனக்கு  சந்தேகம்,  சரி,  வா உள்ளே. நான் யாரை  ப்ரார்த்திகொண்டிருந்தேன்  என்று நீயே பாரேன். இது தான்  என்  தெய்வம். !!”
நாரதர்  என்ன  பார்த்தார்?
குட்டி குட்டியாக  நிறைய நாரதர்அர்ஜுனன்ராதை,  கோபியர்எண்ணற்ற  கோடானு கோடி  மனிதர்கள்,ரிஷிகள்பசுக்கள்கோபர்கண் கொள்ள வில்லை அவற்றை  பார்த்து  புரிந்துகொள்ள!!” 
இவர்களா உன்  தெய்வம்  கிருஷ்ணா?”
ஆம்.  நாரதா. எண்ணற்ற உயிர்களை  நான் படைத்து காத்தேன்.  ஒவ்வொரு முறை நான் அவதரிக்கும்
போதும் அந்த அந்த  அவதாரத்தில்  என் மீது  பிரேமை,  பரிபூர்ண பக்தி வைத்து  என்னை
பூஜிக்கும்,  பிரார்த்திக்கும்,அவர்களை,அவர்களின் ப்ரேமையை,  பக்தியை,  பரிபூர்ண அன்பை  நான் பூஜிக்கபிரார்த்திக்க வேண்டாமா??. இவர்களை  தவிர நான் யாரை பூஜிக்க, பிரார்த்திக்க முடியும்?
கிருஷ்ணனின்   உள்ளத்தை,  உண்மையான  மனதை,  உயிர்கள் மேல்  உள்ள  பாசத்தை   பரிவை புரிந்து கொண்ட நாரதன்  தன்   அவசர புத்தியை  நினைத்து வருந்தினான்..

ramanama magimai

ராம நாம மகிமை!
==============

ஸ்ரீ போதேந்திர ஸ்வாமிகள் காஞ்சி காமகோடி பீடத்தின் 59வது பீடாதிபதி ஆவார். ராம நாம மகிமையை விளக்கும் நூல்களை உலகுக்குத் தந்தவர் இவர்.

இப்படிப்பட்ட மகானான ஸ்ரீபோதேந்திரரின் வாழ்வில் சுவையான சம்பவம் ஒன்று நடந்தது. அவர் ஒரு முறை தீர்த்த யாத்திரை புறப்பட்டார். காசியிலிருந்து திரும்பும் வழியில் ஜகந்நாதர் கோயில் உள்ள புரியை அடைந்தபோது இருட்டிவிட்டது. ஸ்வாமிகள், தம் குருவான கவிஞர் லட்சுமிதரரின் வீட்டுக்குச் சென்றார். இரவில் எவரையும் தொந்தரவு செய்ய விரும்பாத ஸ்ரீபோதேந்திரர், அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டார். அப்போது அந்தணர் ஒருவர் பதற்றமாக வந்து லட்சுமிதரரது வீட்டுக் கதவைத் தட்டினார். லட்சுமிதரரின் மகன் லட்சுமிகாந்தன் கதவைத் திறந்து, அந்த அந்தணரை உள்ளே அழைத்து பாய் விரித்து அமரச் செய்தார்.

‘‘இரவில் தொந்தரவு செய்வதற்கு மன்னியுங்கள். எனக்கு ஒரு பிரச்னை!'' என்ற அந்தணர் தொடர்ந்து பேசினார்: ‘‘பல மாதங்களுக்கு முன் என் மனைவியுடன் காசி யாத்திரை போனேன். காசிக்குப் பக்கத்தில் ஓர் ஊரில் விடுதி ஒன்றில் தங்கினோம். காலையில் எழுந்து பார்த்தால் மனைவியைக் காணவில்லை. அவள் இல்லாமலேயே காசி யாத்திரையை முடித்துக் கொண்டு, அதே விடுதியில் வந்து தங்கினேன். அவள் நினைவு என்னை வாட்டி எடுத்தது. மறு நாள் நதியில் குளிக்கும்போது ‘ஸ்வாமி’ என்று என் மனைவியின் குரல். நிமிர்ந்து பார்த்தால், பயங்கரத் தோற்றத்துடன் ஒரு கரிய உருவம். அந்த உருவம், ‘ஸ்வாமி! விடுதியில் சில கயவர்கள் என்னைக் கடத்திச் சென்று நாசம் செய்து விட்டனர். உண்ணாமல், உறங்காமல் உடல் நலம் கெட்டு இந்த உருவில் வாழ்ந்து வருகிறேன். இன்று தங்களைக் காணும் பாக்கியம் பெற்றேன். என்னை அழைத்துச் செல்லுங்கள். இனி, தங்கள் அருகிலேயே இருந்து தாங்கள் இடும் பணிகளை செய்ய ஆசைப்படுகிறேன்!' என்றாள். இரக்கமாக இருந்தது. அவள் மீது தவறு இல்லை என்று அழைத்து வந்து விட்டேன். இதற்குப் பரிகாரம் சொல்லுங்கள்!'' என்றார்.

லட்சுமிகாந்தன், ‘‘அந்தணரே... ராமா என்று மூன்று முறை தங்கள் மனைவியைச் சொல்லச் சொல்லுங்கள். சரியாகிவிடும்!'' என்றார்.

லட்சுமிகாந்தன் சொன்னதைக் கேட்டு அறைக்குள் இருந்த அவர் தாயார், ‘‘ராம நாமத்தை பக்தியுடன் ஒரு முறை சொன்னாலே குறை நீங்கிவிடும் என்று உன் தகப்பனார் சொல்லக் கேட்டிருக்கிறேன். நீ ஏன் மூன்று முறை கூறச் சொல்கிறாய்?'' என்றார்.

இந்த உரையாடலைச் செவிமடுத்தவாறே ஸ்ரீபோதேந்திரர் அந்த வீட்டுக்குள் நுழைந்தார். அவரை அடையாளம் கண்டுகொண்ட லட்சுமிகாந்தன் அவர் காலில் விழுந்து வணங்கினார். ஸ்வாமிகள் லட்சுமிகாந்தனிடம், ‘‘அந்தணருக்குத் தாங்கள் கூறிய பரிகாரத்துக்கு ஏதேனும் ஆதாரம் உண்டா?'' என்று கேட்டார்.

உடனே லட்சுமிகாந்தன் தன் தகப்பனாரால் எழுதப்பட்ட, நாம கௌமுதி என்ற நூலை ஸ்வாமிகளிடம் தந்தார். ஸ்வாமிகள் அதைப் படித்துப் பரவசம் அடைந்தார். ‘‘இந்த நூலில் ராம நாம மகிமை சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. இதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் காட்ட இந்தப் பரிகாரம் ஒரு சோதனையாக இருக்கட்டும். இந்த அந்தணரின் மனைவி இங்குள்ள புஷ்கரணியில் மூழ்கி, ராம நாமத்தைக் கூறி பழைய உருவத்தை அடையட்டும்!'' என்றார்.

அதன்படி மறு நாள் காலையில் அந்தப் பெண் புஷ்கரணியில் மூழ்கி எழுந்து, ‘‘ராமா’’ என்று ஒரு முறை கூறியதும், பழைய உருவம் பெற்றாள். அவள் முகத்தில் மங்களகரமான குங்குமப் பொட்டு பிரகாசித்தது. அனைவரும் இந்த அதிசயம் கண்டு மகிழ்ந்தனர். ஸ்ரீபோதேந்திர ஸ்வாமிகள் அந்தப் பெண்ணின் கையால் பிட்சை பெற்று, தம்பதியை ஆசீர்வதித்துவிட்டுத் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

happy ramanavami

thanks to rajan ramaswamy

Thursday, April 18, 2013

ஸ்ரீராம நவமி

[மகா பெரியவாள் தெய்வத்தின் குரலில்]

ஸ்ரீராம நவமி

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைத்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்

(கம்பராமாயணம் - சிறப்புப் பாயிரம் 14)

ஸ்ரீ ராமநவமியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் கம்பராமாயணத்தில் ஸ்ரீ ராமாவதார கட்டத்தில் உள்ள கீழ்காணும் பாகங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

வேய்புனர் பூசமும் விண்ணு ளோர்களும்

தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே.

சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்

வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்

நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்

தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஒங்கவே.

ஒருபகல் உலகெல்லாம் உதரத்துட் பொதிந்

தருமறைக் குணர்வரும் அவனை யஞ்சனக்

கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்

திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.

(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்)

இருபது வயதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீ ராமநவமியன்று முழுவதும் பட்டினி (சித்த உபாவாஸ) விரதம் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு கிரமத்திலும் பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து, பிறகு, ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம் என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைச் சொல்லிக்கொண்டு, ஊரைச் சுற்றிக் கொண்டு, முதலில் ஆரம்பித்த இடத்தை அடைந்து, அங்கு பத்து நிமிஷம் பஜனை செய்து, பூர்த்தி செய்ய வேண்டும்.

மறுநாள் காலை அதே இடத்தில்கூடி, ஸ்ரீராம பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்து, பத்து நிமிஷம் பஜனை செய்து, ஊர்ப் பொதுச் செலவில் ஏழை மக்களுக்கு அன்னம் பாலிக்க வேண்டும்.

மங்கள கீதம் பாட

மறையோலி முழங்க வல்வாய்ச்

சங்கினம் குமுறப் பாண்டில்

தண்ணுமை யப்பத் தாவில்

பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்

பூமழை பொழிய விண்ணோர்

எங்கள் நாயகனை வெவ்வேறு

எதிர் அபிடேகஞ் செய்தார்.

மாதவர் மறைவ வாளர்

மந் ¢திரக் கிழவர் முற்று

மூதறி வாளர் உள்ளஞ்

சான்றவர் முதனீ ராட்டச்

சோதியான மகனு மற்றைத்

துணைவரும் அனுமன் தானும்

தீதிலா இலங்கை வேந்தும் - பின்

அபிடேகஞ் செய்தார்.

சித்தமொத் தனன்என் றோதுந்

திருநகர்ச் செல்வ மென்ன

உத்தமத் தொருவன் சென்னி

விளங்கிய உயர்பொன் மௌலி

ஒத்துமெய்க் குவமை கூர

ஒங்குமூ வுலகத் தோர்க்குந்

தத்தம் உச்சியின்மேல் வைத்தது

ஒத்தெனத் தளர்வு தீர்த்தார்

(கம்ப ராமாயணம் : யுத்த காண்டம் திரு அபிடேகப் படலம்)

ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொர்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மமகிழ்ந்தவர்கள் என்பது கடைசீச் செய்யுளின் கருத்து.

நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும், நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.