எலுமிச்சை...மாங்காய்...
கிராமத்து நபர்களிடம் பேசும்போது பல விஷயங்கள் தானாய் நமக்குக் கிடைக்கும். அப்படித்தான் சமிபத்தில்ஒரு கிராமத்திற்கு சென்றிருந்த பொழுது ஒரு பெரியவரை சந்தித்தேன்.வயதில் மூத்தவர் என்பதால். மிகவும் ஆர்வமாய் பேச ஆரம்பித்தார்.மெலிதான பயம் என்னுள் எழ அவரோடு சில பல விஷயங்களை விவாதிக்க ஆரம்பிக்க அவர் ஒரு தகவல் பெட்டகம் என்பதை அறிந்து சுவராஸ்யமானேன். அதைப் புரிந்த அவர் இன்னும் ஆர்வமாய் பேசுவதோடு மட்டுமல்லாமல் என்னை சோதிக்கவும் ஆரம்பித்துவிட்டார். அவர் கேட்ட இரண்டு கேள்விகளும் அதற்கு அவர் கொடுத்த விளக்கங்களும் தான் இந்த இடுகையில்.’பெரிய பொறுப்பில் இருப்பவரையோ அல்லது பெரிய மனிதர்களையோ பார்க்கச்செல்லும்போது ஏன் எலுமிச்சம்பழத்தை தருகிறோம்’என்று முதலாவதைக் கேட்க,முழித்ததைப் பார்த்து அவரே விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.‘ஏன் தருகிறோம் என்று நமக்கோ, எதற்கு வாங்கிக்கொள்கிறோம் என வாங்குபவருக்கோ, எல்லாம் சேகரித்து ஊறுகாய் போட எடுத்து செல்லும் காரியதரிசிக்கோ கண்டிப்பாய் தெரியாது. எலுமிச்சை மட்டும்தான் பிஞ்சாக இருந்தாலும் சரி, காயாக இருந்தாலும் சரி அல்லது பழமாக இருந்தாலும் சரி... ஒரே சுவையோடுதான் இருக்கும். அதன் சுவையில் மாற்றம் இல்லாதது போல பெரிய பொறுப்பில் இருந்தாலும், வசதி வாய்ப்புகள் நிறைய வந்தாலும் என்றும் மாறாமல் உங்கள் இயல்பான குணத்தோடு இருப்பீராக என்பதை உணர்த்தத்தான்’ என்றார்.அதை அவர் சொன்ன பாங்கு மிகவும் அருமையாய் இருந்தது. இங்கு எழுத்தால் அந்த அளவிற்கு என்னால் சொல்ல முடியவில்லை என்பதே உண்மை. அடுத்த கேள்வியினை கொஞ்சம் இடைவெளி விட்டுக் கேட்டார்.‘ஏன் மாங்காய் மடையன் எனச் சொல்லுகிறோம்’ என்பதே அது. தெரியாமல் விழிக்க அவர் சொன்ன விளக்கம்,‘ஒரு சிலர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு,ராத்திரி ஒரு பேச்சு என மாற்றி மாற்றி பேசுவார்கள். அப்படி பேசியவரா இப்படி பேசுகிறார் என கேட்பவர்களுக்கு வியப்பாய் இருக்கும். மாங்காய் பிஞ்சில் துவர்க்கும், காயில் புளிக்கும், பழமானதும் இனிக்கும். மூன்று நிலைகளில் மூன்று சுவைகளில் இருப்பது போல நேரத்துக்கு ஒரு பேச்சு பேசுபவர்களைத்தான் மாங்காய்மடையன் என சொல்லுகிறோம்’என்று சொல்லி முடித்தார்.------------------------------------------------------------ ஏணி, தோணி,எலுமிச்சங்காய் இந்த மூன்றையும் "குரு"வுக்கு ஒப்பிடுவார்கள். ஏணியும், தோணியும் முறையே பலரை ஏற்றி விட்டும்,இக்கரையிலிருந்து அக்கரைக்கு கொண்டுவிட்டும் பலமுறை பண்ணினாலும், தான் மட்டும் இருந்த இடத்திலேதான் இருக்கும். எலுமிச்சங்காய் ஏன் இங்கே வந்தது? நாம் நம் மூக்கு நுகர்ந்ததை,நாக்கு ஊறுவதை, கண் கண்டதை எல்லாம் எக்கச்சக்கமாக சாப்பிட்டுவிட்டு ஜீரணிக்க முடியாமல், மலைப்பாம்பு போல் இருக்கும் போது, ஒரு சிறு துண்டம் எலுமிச்சங்காய் நம் வயிற்றுக்குள் போனால், கொஞ்ச நேரத்தில் எல்லாம் ஜீரணமாகி விடும். ஆனால், எலுமிச்சங்காய் மட்டும் லேசில் ஜீரணமாகாமல், அதிகநேரம் தங்கியிருக்கும். ------------------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ --
Showing posts with label the terms and method of village people in INDIA. Show all posts
Showing posts with label the terms and method of village people in INDIA. Show all posts
Saturday, March 31, 2012
village activities
Subscribe to:
Posts (Atom)