திருநெல்வேலி மாவட்டத்தின் தென்கோடியில் கேரள எல்லையில் அமைந்த, இயற்கை அழகின் எழில் சார்ந்த நகரம் செங்கோட்டை ஆகும்.
கேரளத்திலிருந்து 52 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு இந்த
பகுதியை "நல்லூர் ராஜா" என்பவர் ஆண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இவ்வூரின் மேற்கு பகுதியிலுள்ள நல்லூர்கால் பகுதியில் கோட்டை அமைத்து மகாதேவர் கோயில், அதையொட்டிய அரண்மனை தீர்த்தகுளம், சுற்றியுள்ள கோட்டை போன்றவற்றை காலம் சிதைத்த அடையாளங்களாக இன்றும் காணலாம். அக்கோட்டைதான் செங்கோட்டை என அழைக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும் செங்கோட்டை பல மகான்கள் அவதரித்த பூமியாகும். இங்கு நகரை சுற்றி ஏராளமான மகான்களின் ஜீவசமாதிகள் நிறைந்திருப்பதை காணலாம். இங்கு சிவனடியார்கள் அதிகமாக இருந்ததால் சிவன் கோட்டை என்ற பெயரும் இருந்தது. காலப்போக்கில் சிவன்கோட்டை மருவி செங்கோட்டை என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது.
பல ஆண்டு காலமாக கேரளத்தின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம் அன்று திருவாங்கூர் மன்னர்களின் தனிக்கவனத்தை ஈர்த்தது. இந்நகரை சுற்றி 28 குளங்கள் உள்ளன. முன்பு கேரளாவோடு இருந்தபோது யாராவது திருவாங்கூர் மகாராஜாவை சந்திக்க சென்றால் தச்சன்குளம் தண்ணீர் புன்னை மரத்தை தொட்டு விட்டதா என்றுதான் முதலில் கேட்பாராம் . தச்சன்குளம் நிரம்பினால் முப்போகம் விளைவது உறுதி என்பது மகாராஜாவுக்கு தெரியுமாம்.
மேற்கு தொடர்ச்சி மலைக்கு மிக அருகில் உள்ள மிக சிறிய நகரம் செங்கோட்டை. 1956ம் ஆண்டு வரை கேரள எல்லைக்குட்பட்டிருந்தது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்திலிருந்து பிரிந்து 1-11-1956ல் தமிழ்நாட்டுடன் இணைந்தது. இவ்வூர் தாலுகா அந்தஸ்து பெற்ற ஊராகும்.
இவ்வூரின் நுழைவு பகுதியில் ஒரு வளைவு அமைக்கபபட்டுள்ளது. அந்த வளைவின் இருபுறங்களிலும் இருகற்சிலைகள் 5 அடி உயரத்தில் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இன்னும் சங்குவடிவம் மேல்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது.
துவாரபாலகர் சிலை:
வடபுறம் துவர பாலகர் சிலை வலது கரத்தின் ஒரு விரலை காட்டியபடி இடதுகரத்தின் மடக்கி மூடிவைத்தபடியும் உள்ளது. இச்சிலை குறித்து செங்கோட்டையில் சிற்பகலை கூடம் நடத்தி வரும் சிற்பி மணி ஆசாரி கூறுகையில், துவாரபாலகர் சிலைகள் பெரிய ஆலயங்களில் மூலஸ்தானத்திற்கு செல்லும் வாயிலில் வைக்கப்பட்டிருக்கும்.
அந்த சிலை போல் செங்கோட்டை நகர நுழைவு பகுதியில் வைக்கப்பட்டதின் நோக்கம் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஆன்மீக பூமியாக விளங்கியது. அதன் நுழைவு பகுதியாக செங்கோட்டை இருந்ததால் ஊரின் நுழைவு பகுதியில் துவார பாலகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள இரு சிலைகளுக்கு இரண்டு கதைகள் உண்டு.
ஊருக்குள் நுழையும்போது வலப்பக்கம் அமைந்துள்ள சிலை ஒருவிரலை காட்டியபடியும், மற்றொரு கரம் மடித்து வைத்தும் இருக்கிறது. இவ்வூருக்குள் நுழையும் நீங்கள் ஒரே நிலைப்பாட்டோடும், வேறு சிந்தனையின்றி மனதை அலைபாயவிடாமல் எண்ணங்களை அடக்கி அமைதியாக உள்ளே வாருங்கள், உங்களது பிரச்சனையை நான் தீர்க்கிறேன் என்றும், இடதுபுறம் அமைக்கப்பட்டுள்ள சிலை இறைவனை நம்பி இவ்வூர் வந்தவர்கள் மனபாரம் அகற்றி வெளியேறுங்கள் என்ற தத்துவத்தை விளக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுபோன்று எனக்கு தெரிய எந்த ஊரிலும் ஊரின் நுழைவு பகுதியில் இதுபோன்ற சிலைகள் அமைக்கப்படவில்லை. மாற்றாக வேறு சாமி சிலைகள் தான் காவல் தெய்வங்களாக வடிவமைத்து வைத்துள்ளனர் என்றார்.
செங்கோட்டை என்றழைக்கப்படும் அன்றைய சிவன்கோட்டையில் நுழைவிலேயே பழமைவாய்ந்த ஏராளமான ஆலயங்கள் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment