Wednesday, July 24, 2013

வாழையடி வாழை

 வாழையடி வாழை!

Plantain---or Banana – tree is given a position of high esteem in our culture. When elders bless the younger people, they used to say, ‘
வாழையடி வாழையாக வாழ்!’

Mahaperiava explains in detail, the significance of this expression during one of His talks to Devotees.

Ra.Ganapathy anna writes in his book, ‘
சொல்லின் செல்வர் ஸ்ரீகாஞ்சி முனிவர்’ on this talk. The book is published by Divya Vidhya Trust.
பெரியவாள்போடும்சாப்பாட்டுவிருந்தை……………………………………….முடிக்கிறோம்.இலை போட்டு அதில்தானே விருந்தைப் படைப்பது?அந்த இலையைத் தரும் வாழை ஜாதி பற்றி அவர்வாய்மொழி கூறாது முடிக்கலாமா?

மர ஜாதியில் வாழை ரொம்பச் சின்னதானஒன்றுதான்ஆனால் பெரிய பெரிய மரங்களுக்கும்இலை துளியளவே இருக்கும்போது இதற்குத்தான்போட்டுக் கொண்டு சாப்பிடுகிற’ அளவுக்குப் பெரிசாகஇலைஅப்படிதாய் மனஸோடு சாதம் போட்டுப்பார்க்கிறதாலேதான் வாழையை நம்ஸம்பிரதாயத்தில் உசத்தி வைத்திருக்கிறது.

எத்தனையோ பழங்கள் நல்ல ருசியாக,தேஹாரோக்யம்புஷ்டி தருவதாக இருக்கத்தான்செய்கின்றனஆனால் அதில் வாழை ஒன்றைத் தவிரஎதையாவது அதையே முழுச் சாப்பாட்டுக்குப்பதிலாகச் சாப்பிட முடிகிறதோமுப்பழங்களில் மீதிஇருக்கிற மாபலாப்பழங்களைக் கூட வயிறுரொம்புகிற மாதிரிச் சாப்பிட முடிகிறதோஒருவேளை ஆப்பிள் அப்படி இருக்கலாம் ஆனால் அதுபணம் படைத்தார்களுக்கு மட்டுந்தான்கட்டுப்படியாகும்சர்வ ஜனங்களும் காசு கொடுத்துநாலு பழம் வாங்கிச் சாப்பிட்டு வயிறு ‘தம்’ மென்றுநிறையும்படி இருப்பது வாழைதான்அதுதான் (சிரித்து) ‘பீபிள்ஸ் ஃப்ரூட்!”


வாழைப்பழம் ஆஹாரம் என்றால்வழைப் பூ மருந்து.பழமாகும்போது தித்திக்கிற அது பூவாகஇருக்கும்போது துவர்க்கிறதுதுவர்ப்புப் பண்டங்களேஉடம்புக்கு ரொம்ப நல்லதுபூஞ்சைக் குடலுக்குக் கூடவாழைப் பூ ஏற்றது.

மற்ற பூக்கள் வாஸனைவழைப் பூ மட்டும்அப்படியில்லைவாஸனா ஸஹிதம்வாஸனாக்ஷயம் என்று வேதாந்தத்தில் சொல்கிறார்களே,அதைக் காட்டுவதாக இது இருக்கிறதுஇன்னும்வேதாந்தமாக ஒன்றுவிதை போடாமல் முளைப்பதுஅதுகர்மா விதையிலேதான் ஜீவன் மறுபடிமறுபடிபிறந்துவினையைப் பிறவி தோறும் விதைத்துப்புனர்ஜன்மங்கள் எடுத்துக் கொண்டே இருப்பதுஅந்தவித்து அடிபட்டுப்போன ஞானத்தை வாழைநினைவூட்டுகிறது.

இப்படிச் சொன்னதால் அது வாழ்க்கைக்குஸம்பந்தப்படாதது என்று அர்த்தம் இல்லைவழ்கிறமட்டும் நல்லபடி வாழ்வதற்கும் அதுதான் பாடம்போதிப்பது.

“’
வாழ்வு’ என்ற வார்த்தை ஸம்பந்தமானதே ‘வாழை’.நம்முடைய வாழ்க்கையில் கொஞ்சமும் வீண்வ்ருதாஇல்லாமல் முழுக்கப் பிரயோஜனமாக இருக்கவேண்டுமென்பதுதானே ‘ஐடியல்’? அந்த ‘ஐடியலைரூபித்துக் காட்டுவதாக இருப்பது வாழைதண்டு,பட்டைதார் உள்படஇலைபூகாய்பழம் என்றுஅதன் ஸர்வாங்கமும் பிரயோஜனமுள்ளதாகஇருக்கிறதல்லவாஆனபடியால், ‘வாழ்க்கை’ வாழ்வுஎன்று அதற்கே பெயர் வைக்கிறஅபிப்பிராயத்தில்தான், ‘வாழை’ என்று பெயர்வைத்தது.

அதை வாழை மரம் என்கிறோம்மரம் என்றால் அதுசொர சொரவாக இருப்பதுதானே வழக்கம்இது ஒன்றுமாத்திரம் வழவழாவாக இருக்கிறதுகரட்டுமுரட்டுத்தனமில்லாமல் மழமழவென்று எல்லாவிதமனுஷ்யர்களுக்கும் ஸந்தர்ப்பங்களுக்கும்அநுகூலமாக நம்மைப் பண்ணிக்கொள்ள வேண்டும்என்பதை உபதேசிக்கிறதே அந்த வழவழவழவழப்பைவைத்தும் அதற்கு ‘வாழை’ என்று பெயர்கொடுத்திருக்கலாம்.

விதையாகி வம்ச விருத்தி ஏற்படுத்திக் கொள்ளும்மாஆல்இன்னும் அநேக வ்ருக்ஷங்களில் கணக்குவழக்கில்லாமல் விதைகள் தோன்றுகின்றனஅதுஒவ்வொன்றும் முளைத்தால்இந்த பூமியே ஒருவ்ருக்ஷ ஜாதிக்குக்கூடப் போதாதுஅப்படிநடக்காததால் அந்த விதைகளில் பெரும்பாலானவைமுளைப்பதில்லை என்று தீர்மானமாகிறது.முளைத்திருப்பதிலும்எந்தக் கன்று எந்தத் தாய்மரத்தின் விதையிலிருந்து முளைத்திருப்பது என்பதுஎவருக்கும் சொல்லத் தெரியாததாக இருக்கிறது.வாழையில்தான் தாய் மரத்தைச் சுற்றியே அதன்கன்றுகள் முளைப்பதால் இதிலிருந்து இது பிறந்ததுஎன்று தீர்மானமாகத் தெரிகிறதுகன்று பிறந்ததோடுதாய் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விடுகிறது.ஸத்பிரஜை உண்டான அப்புறம் தாம்பத்யம்இல்லாமலிருந்து ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளவேண்டும் என்று நமக்கு தர்ம சாஸ்திரம்சொல்கிறதென்றால்வாழையோ அதைவிடஞானத்துடன் பெரிய ஸந்நியாஸமாகப் போயே போய்விடுகிறதுஇங்கே வேதாந்தம்இதிலேயே வாழ்க்கைத்தத்துவமும்நல்ல ப்ரயோஜனமுள்ள ஒரு வாழை,அதே ப்ரயோஜனத்திற்காக லோகத்திற்குத் தரும்ப்ரஜைகளான கன்றுகளைஇந்தப் ப்ரஜை இந்தஅம்மாவுக்குப் பிறந்தது என்று நமக்கெல்லாம்காட்டும்படி இருக்கிறதல்லவாவேறே எந்த மரத்தின்விஷயமாகவும் அப்படி இல்லையேஅதனால்தான்வாழையடி வாழையாக வாழ்’ என்று வாழ்த்துவதாகஇருக்கிறதுஅந்த வாழ்த்துக்கு அடையாளமாகவேகல்யாணங்களிலும் மற்ற மங்கள வைபவம் எதிலுமேவாழை கட்டுவதாக ஏற்பட்டிருக்கிறதுவாழை மரம்மங்களச் சின்னம்.”

No comments:

Post a Comment